MCTWA

MCTWA

மூன்று நிலைகளில் பொருள் சந்தை குறித்த பாடத்திட்டம் உருவாக்கி உள்ளோம். 1.அடிப்படை கல்வி (பொருள் சந்தை குறித்த அடிப்படை விபரம்) 2.உயர் கல்வி (தொழில்நுட்பம், அடிப்படை காரணிகள்) 3.அட்வான்ஸ் கல்வி (A_Z பொருள் சந்தை குறித்த முழு கல்வி)

வணிகர்களுக்கு எந்த நிலை கல்வி தேவையோ அந்த நிலை கல்வியில் இணைந்து முறையான பயிற்சி பெற்று வணிகத்தில் ஈடுப்பட்டு சுயமாக வருமானம் ஈட்டலாம்.நம் சங்கம் இந்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி தருகிறது. கல்லூரி மாணவ, மாணவிகளும் இவ்வாய்ப்பை பயன் படுத்தி முன்னேறலாம்.

மதுரை பொருள்சந்தை வணிகர்௧ள் நலச்சங்கம் வழங்கும் சென்னையிலும்,மதுரையிலும் மாதந்தோறும் பங்குச்சந்தை மற்றும் பொருள் சந்தை பயிற்சி வகுப்பு நுழைவு ௧ட்டணம் ரூபாய் 750/- தொடர்பு : 0452 – 4362385 , 9489378385.

Thursday, 14 April 2016

திரு சந்திரசேகர் அவர்கள் நினைவு அஞ்சலி
என் முகம் மறந்தாலும் எனக்கு
உன் முகம் மறவாது சந்திரசேகர்!
நட்பின் உருவாய் வாழ்ந்தவனே
நட்பின் ஆழத்தை உணர்ந்தவனே !
இடியாய் தாக்கியதே இதயத்தில்
இன்முகம் கண்டதும் இன்று எனக்கு !
உறங்கும்போது உன்னை பார்த்ததில்லை
உயிரில்லா உடலாய் நீ உறங்குகிறாயே !

ஆலமரமாய் நிழல் தந்தாயே
அடிப்பட்ட மரமாய் சாய்ந்தாயே !
படைத்தவர்கள் இங்கே கதறியழ
காணும் விழிகளோ வழிகிறது !
சட்டென்று நீ பறந்து சென்றதால்
பட்டமரம் ஆனது தாரமும் தளிர்களும் !
விட்டுவிட்டு சென்றாய் விண்ணிற்கு
விழுதுகள் சுவடுகளாய் மண்ணிற்கு !

எதையும் தாங்கிய இதயம் அல்லவா
வீறுகொண்டு எழுந்திடும் வீரனல்லவா !
காத்திருக்கிறோம் உன்னை சுற்றியே
காலம் தாழ்ந்து நீ எழுவாய் என்றே !
உன்னால் வளர்ந்தவர் ஆயிரமாயிரம்
உன்னை விரும்பியவர் பல்லாயிரம் !
பாசமுள்ள நண்பனே மறந்தாயோ நீயும்
படைகளாய் பக்கத்தில் இருந்தோமே !

விலகி சென்றிட எண்ணம் ஏன் வந்தது
விளக்கி சொல்லிட யாரும் இல்லையே !
இனி எங்குதான் காண்போம் உன் முகத்தை
இனிதே பழகிய உன் திரு முகத்தை !
நம்பத்தான் முடியவில்லை என்மனதால்
நானும் நீயும் இனி பிரிந்திருப்பதை !
ஆறுதல் கூறிட என்னால் முடியவில்லை
ஆறுதல் அளித்திட எனக்கு நீயே இங்கில்லை !
Top of Form
Bottom of Form